அதிக வெப்பநிலை காரணமாக, தண்ணீரின் தேவையும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே.ரணதுங்க தெரிவித்திருந்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரை வீட்டுத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே.ரணதுங்க, மாற்று வழிகள் மூலம் நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

தற்போது நிலவும் அதிக வெப்பம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles