வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
எனவே பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா அவ்வப்போது கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் கருதுகிறார்.
எனவே இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெக்சேத் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இது வடகொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியது.
இந்நிலையில், கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளை, வடகொரியாவுக்கு ஆதரவு வழங்கும் சில நிறுவனங்கள்மீது ஆஸ்திரேலியா அண்மையில் புதிய தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.










