ஆசிரியர், அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர், இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாட்டுக்கு இன்னும் உரிய தீர்வு வழங்கப்படாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதிபர்,ஆசிரியர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மாணவர்கள் இன்று பாடசாலைக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.