தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ள போதிலும், அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை மற்றும் ஏனைய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
” நாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை செப்டம்பர் 06 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்குமாறு ஜனாதிபதி இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், தற்போதுபோன்றே அத்தியாவசிய சேவைகளையும், அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழில் துறைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.” -எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.










