‘அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது’

நாட்டில் அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நிதி அமைச்சில் இன்று (11) நடைபெற்ற கூட்டத்தின் போதே நிதி அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு விநியோகிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, முதல் தடவையாக நிதி அமைச்சில் இன்று கூடியது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்களை எவ்வித தட்டுப்பாடும் இன்றி மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இதன்போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

பால் மா, எரிவாயு, கோதுமை மற்றும் சீமெந்திற்கு ஓரளவு தட்டுப்பாடு காணப்பட்டாலும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் போதுமானளவு இருப்பதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள், நுகர்வோருக்கு உரிய முறையில் கிடைக்காமை தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சில வர்த்தகர்கள் அரசாங்கத்திடமிருந்து சலுகை விலையில் பொருட்களை கொள்வனவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமையும் கூட்டத்தின் போது வௌிக்கொணரப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை உரிய முறையில் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையை வௌிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தின்போது ஆராயப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles