‘அந்நிய செலாவணி கையிருப்பு’ – மாதாந்தம் அறிக்கை கோருகிறார் ரணில்!

அரச கடன் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் மாதாந்தம் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரசிங்க எம்.பி., மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 148 ஆவது சரத்தின் பிரகாரம் அரச நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. எனினும், நாம் தகவல்களை கோரியிருந்தாலும் அவை இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே, மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் முதல் வாரத்திலேயே அரச கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பில் அறிக்கையொன்றை முன்வைக்குமாறு அரச கணக்குகள் பற்றி குழுவிடம் கோரிக்கை விடுக்கின்றென். அப்போது அது பற்றி விவாதிக்க முடியும். நிதி விவகாரத்தில் நிலையான தன்மையை அதன்மூலம் பேணமுடியும்.

அத்துடன், அந்திய செலாவணி கையிருப்பு தொடர்பில் இன்று உரிய தகவல் வழங்கப்படுவதில்லை. கடன் பத்திரங்களும் அதில் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே, சரியான தகவல்கள் அவசியம். தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, ஒரு பில்லியன் டொலருக்கும் குறைவான அந்திய செலாவணி கையிருப்பே இருப்பதாக கதை அடிபடுகின்றது. எனவே, மாதாந்தம் அறிக்கை முன்வைத்தால் உண்மை தன்மையை அறியக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles