அபுதாபி விமான நிலையத்தின் மீது தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் தாங்கிகள் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலிற்கு ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Related Articles

Latest Articles