அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இரண்டாவது சிரார்த்த தினம் எதிர்வரும் மே மாதம் கொட்டகலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு தேசிய தலைவரது ஆளுமையை இளைய தலைமுறையினரும் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் கண்காட்சி ஒன்று நடைபெறவுள்ளதாக இ.தொ.கா ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இக்கண்காட்சியில் அமரர் பயன்படுத்திய பொருட்கள் அவரது நினைவுகளின் நிழல்களாக விளங்கும் புகைப்படங்கள், விருதுகள், வரலாற்று பதிவுகளாக திகழும் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
இக்கண்காட்சியை பயனுள்ள வகையில் மிக பிரமாண்டமாக நடத்தவிருப்பதால் எமது மக்களும் தமது பங்களிப்பினை வழங்குவதற்காக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களிடம் அமரர் ஆறுமுகன் தொண்டமான் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், கடிதங்கள், குறிப்புக்கள் ஏதேனும் இருப்பின் அனுப்பி வைக்கவும். அவைகள் உங்கள் பெயர் விபரங்களுடன் கண்காட்சியில் இடம்பெறும்.
அமரரின் நினைவேந்தலை அர்த்தமுள்ளதாக்க அனைவரும் கை கோர்ப்போம். விபரங்களுக்கு சிரேஷ்ட ஊடக இணைப்பாளர், 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக cwcmedia72@gmail.com மற்றும் congressnewspaper@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியூடாகவும், 071-9455222 என்ற வட்ஸ்எப் இலக்கத்தினூடாகவும் நேரடி அவசர தேவைகளுக்கு 071-6876548/070-4329131 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளவும்.