அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு அடிபணியோம்: கனடாவின் புதிய பிரதமர் கர்ஜனை!

டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை, அமெரிக்கப் பொருள்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது.” என்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.

கனடாவின் 24 ஆவது பிரதமராக தெரிவான பின்னர் ஆற்றிய வெற்றி உரையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ கனடா அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமுலில்தான் இருக்கும்.” எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

அமெரிக்க பரஸ்பர வரிக்குப் பணியப்போவதில்லை என்ற அவரது கர்ஜனை அமெரிக்காவை கொதிப்படைய வைத்துள்ளது.

Related Articles

Latest Articles