அமெரிக்காவின் வியூகத்தை தோற்கடித்ததாலேயே ரணில் குறிவைப்பு!

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இடம்பெற்ற அறகலய போராட்டத்தை தோற்கடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தாலேயே அவரை மேற்குலகம் தற்போது குறிவைத்துள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அல்ஜெஷிரா தொலைக்காட்சி நேர்காணல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பட்டலந்த முகாம் தொடர்பில் 1989 ஆம் ஆண்டிலேயே ரணில் விக்கிரமசிங்கமீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் பல தடவைகள் அவர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். சர்வதேச ஊடகங்கள் முன்னிலையில் கதைத்துள்ளார். எனினும், மேற்படி விடயம் தொடர்பில் அவரிடம் எவரும் கேள்வி எழுப்பவில்லை.” எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டு அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட அறகலயவை தோற்கடிப்பதற்கு, பிரதமராக பதவியேற்ற பிறகு ரணில் நடவடிக்கை எடுத்தார். அதனால்தான் மேற்குலக நாடுகளுக்கு சார்பான தலைவராக இருந்தவர் எனக் கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது எதிரியாக பார்க்கப்படுகின்றது. பட்டலந்த முகாமும் நினைவுக்கு வந்துள்ளது.” எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles