கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பிடம் கனடா முறைப்பாடு முன்வைத்துள்ளது.
இந்த தகவலை உலக வர்த்தக அமைப்பு இன்று (மார்ச் 5) உறுதிப்படுத்தியது.
கனடாவின் முறைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்படி அமைப்புக்கான கனேடிய தூதுவர் நாடியா தியோடர்,
‘அமெரிக்காவின் முடிவை எதிர்கொள்ள எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, கனடா அரசாங்கத்தின் சார்பாக, கனடா மீதான அமெரிக்காவின் நியாயமற்ற வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பின் ஆலோசனைகளைக் கோரியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.