அமெரிக்கா, சீனாவுக்கிடையில் வர்த்தக போர் மூளும் அபாயம்!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரியும், எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து சீனா பதிலடி கொடுத்து உள்ளது.

இதனால் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே மீண்டும் ஒரு வர்த்தக போர் ஏற்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

 

Related Articles

Latest Articles