அமெரிக்கா பறந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் உத்தியோபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இன்று இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் பிரதமர் மோடிக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் சிறப்பு அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல திட்டமிட்டமிட்டார். இதற்கான பயண திட்டங்கள் கடந்த மாதமே தயாராகி இருந்தது.

இதையடுத்து டெல்லியில் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அவர் இன்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles