“அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது” என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
‘ சீன மருந்து விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதேயாகும்.
சிலவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போராக இருந்தாலும், வர்த்தகப் போராக இருந்தாலும் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் இறுதி வரை போராட நாங்கள் தயார்” எனவும் தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ட்ரம்பின் கூடுதல் வரிவிதிப்புகளுக்கான எதிர்நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் 25 ஏற்றுமதி ,இறக்குமதி நிறுவனங்களுக்கும் சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.










