அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இலங்கை வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மேற்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினர்.










