அமெரிக்க உளவு விமானத்தை சுட்டுவீழ்த்துவோம் – வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென்கொரியா-அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்து மீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறும்போது,

வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க
உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது.

நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே அமெரிக்க உளவு நடவடிக்கைகளுக்கு வடகொரியா நேரடியாக பதிலளிக்காது. ஆனால் அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் ராணுவ எல்லை கோட்டை தாண்டினால் தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles