அமைச்சரவை நியமனம் தாமதமாவது ஏன்?

10அமைச்சுப் பதவிகளே வெற்றிடமாக உள்ள நிலையில் 14 பேருக்குப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே அமைச்சரவை நியமனம் தாமதமாகி வருகின்றது என்று அரச தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

வெற்றிடமாகவுள்ள 10 அமைச்சுப் பதவிகளுக்குப் பெரும்பான்மையை கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில் இருவரை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி இணங்கவில்லை என்று அறியவருகின்றது.

இதேசமயம், அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளைச் சேர்ந்த துமிந்த திஸநாயக்க, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

10 அமைச்சுப் பதவிகளே வெற்றிடமாக இருக்கும் நிலையில் 14 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையால் நியமனங்கள் தொடர்ந்து தாமதமாகி வருகின்றன என்று கூறப்படுகின்றது.

இதனிடையே, ஜனாதிபதி அமைச்சராக நியமிக்க இணக்கம் காட்டாத இருவரின் பெயர்ப்பட்டியலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாமல் ராஜபக்சவின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles