அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டளஸ் அழகப் பெரும ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காமினி லொக்குகே எரிவலு, மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவிற்கு இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக பொருளாதார இணைப்பாளர் கண்காணிப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.