‘அமைச்சு பதவிகளை துறக்க ராஜபக்சக்கள் முடிவு’ – சிங்கள ஊடகம் தகவல்

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூவர் அமைச்சு பதவிகளை துறக்கவுள்ளனர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரே இவ்வாறு பதவி விலகவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று மாலை இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles