அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் நிறுவனராக உள்ளவர் இம்ரான் கான். பிரதமராக பதவி வகித்த போது ஊழல் முறைப்பாட்டில் சிக்கினார்.
அதன் எதிரொலியாக, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுக்களுக்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தற்போது வரை சிறையில் உள்ளார். இதே வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உலக கூட்டணி எனும் அமைப்பு இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது.
இந்த கூட்டணியானது, நோர்வே அரசியல் கட்சியான பார்ட்டியெட் சென்ட்ரம் உடன் இணைந்து செயல்படுகிறது. இம்ரான் கான் பெயரை பரிந்துரைத்துள்ளதை பார்ட்டியெட் சென்ட்ரம் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக ஆற்றிய பணிகளுக்காக இம்ரான் கான் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கிறோம். நோபலுக்கு பரிந்துரைக்கும் உரிமை கொண்ட ஒருவருடன் கூட்டணி வைத்து பரிந்துரைத்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என பார்ட்டியெட் சென்ட்ரம் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டில் தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக நோபல் பரிசுக்கு இம்ரான்கான் பரிந்துரைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.