அமைதியான தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் பொலிஸார் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“160 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 13 ஆயிரத்து 383 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கு அப்பால் 3 ஆயிரத்து 200 பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுவர். அண்ணளவாக 70 ஆயிரம் பொலிஸார் வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 12 ஆயிரத்து 227 சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும் நேரடியாகத் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர். சில முக்கிய இடங்களின் பாதுகாப்புக்காக 11 ஆயிரம் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஏதேனும் தேவை ஏற்பட்டால் மேலும் இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர். பொலிஸார், முப்படையினர் அடங்களாக மொத்தமாக 90 ஆயிரம் வரையான பேர் தேர்தல் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் நடைபெறும் நாளிலும் அதற்குப் பின்னரும் பொலிஸ் அதிகாரிகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தல் பிரசாரங்கள் சுமுகமாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பெறுபேறுகள் வெளியாகி ஒரு வார காலத்துக்குச் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles