நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது அலகு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஹட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்திலும், ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியிலும் இடம்பெற்றது.
இதன்போது ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் கடந்த ஜூலை 31 திகதி முதலாம் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 2,886 பேருக்கும் ஹைலன்ஸ் கல்லூரியிலும், ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் திகதி முதலாம் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 2005 பேருக்கும். டி.கே.டப்ளியு கலாசர மண்டபத்திலும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
கே. சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்