அரசும், ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையும் தமக்கிடையிலான மோதலை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரான நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
” தந்தையும், தாயும் தினமும் சண்டைபிடித்துக்கொண்டு, குழந்தையை முறையாக வளருமா கூறமுடியாது. முதலில் தாய், தந்தை சண்டை நிறுத்தப்பட வேண்டும். அதேபோல ஊடகங்கள் மத்தியில் சென்று சொற்போரில் ஈடுபடுவதை அரசும், கிரிக்கெட் சபையும் நிறுத்த வேண்டும். அப்போதுதான் இலங்கை கிரிக்கெட் அணி மீட்சி பெறும்.
தற்போதுள்ள இலங்கை கிரிக்கெட் அணி இளம் அணியாகும். சிறந்த வீரர்கள் உள்ளனர். அணி வெற்றிபெற்றால் உரிமைகோர பலர் முன்வருவார்கள், ஆனால் தோல்வி அடைந்தால் அவர்கள் காணாமல்போய்விடுகின்றார்கள். வீரர்களின் உள பலத்தை கட்டியெழுப்ப வேண்டும். வென்றாலும், தோல்வி அடைந்தாலும் நாம் அணியுடன் இருக்க வேண்டும்.” – என்றார்.










