அரசமைப்பை மீறியுள்ளார் ஜனாதிபதி – பீரிஸ் குற்றச்சாட்டு

” பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பைமீறும் வகையில் செயற்பட்டுள்ளார். அரசமைப்பு பேரவையை உதாசீனப்படுத்திவிட்டு இது விடயத்தில் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார். இது பயங்கரமான – பாரதூரமான – தவறான முன்னுதாரணமாகும்.” – என்று சட்டத்துறை பேராசிரியரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொலிஸ்மா அதிபருக்கு நான்கு தடவைகள் சேவைகால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 3ஆவது மற்றும் 4ஆவது தடவைகளின்போது சேவை நீடிப்பு வழங்குவதற்கு அரசமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. அரசமைப்பு பேரவையின் கருத்தை நிராகரித்துவிட்டே தன்னிச்சையாக ஜனாதிபதி பதவி நீடிப்பை வழங்கியுள்ளார். இது பயங்கரமான முன்னுதாரணமாகும். பிரதமர் நீதியரசர், நீதியரசர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட உயர் நியமனங்களுக்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி அவசியம். இதனை ஜனாதிபதி கருத்திற்கொள்ளவில்லை. அவர் அரசமைப்பைமீறும் வகையில் செயற்பட்டுள்ளார். இதனை நாம் எதிர்க்கின்றோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles