“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்க வீடு வழங்கப்பட வேண்டும் என அரசமைப்பில் எங்கு கூறப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துங்கள்.”
இவ்வாறு நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு வழங்கப்பட வேண்டும் என அரசமைப்பில் எங்கும் கூறப்படவில்லை. மக்களை தவறாக வழிநடத்துவதற்காகவே ராஜபக்ச தரப்பு போலித் தகவல்களை பரப்பிவருகின்றது. அரசமைப்பைமீறும் வகையில் அரசாங்கம் செயல்படுகின்றது என்றெல்லாம்கூட கூறப்பட்டுவருகின்றது.
அரசமைப்பில் எவ்விடத்தில் இவ்விடயம் உள்ளது என்பதை நாமல் தரப்பு கூறி வேண்டும்.
அதேவேளை, தேசிய பாதுகாப்பு சபைக்குகூட தெரியவராத, புலிகள் அமைப்பு மீள எழுகின்றது என்ற விடயம் தொடர்பான தரப்பு ராஜபக்சக்கள் வசம் இருந்தால் நீதிமன்றம் ஊடாக அவை தெரியவந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு நல்லது.”- என்றார்.










