அரசியலமைப்பு பேரவை – சிவில் பிரதிநிதிகள் குறித்து வியாழன் முடிவு

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடி சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கு 10 உறுப்பினர்கள் உள்ளடங்கும் நிலையில் அதற்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார். பொருத்தமான விண்ணப்பங்கள் மற்றும் பதவிக்கு தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பற்றிய ஆய்வுக்குப் பின்னர் அதற்கு மூன்று பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும், அதன் பின்னர் அவர்களை, ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு நியமிப்பார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles