அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை!

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு காலம்தாழ்த்தாது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்று ஒரு மாத காலப்பகுதிதான் ஆகின்றது. இருந்தாலும் உரிய சட்டத்தரப்புகளுடன் கலந்துரையாடி, கூடிய விரைவில் அரசியல் கைதிகள், சாட்சிகளின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

ஊழல், மோசடிகள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாகவும் நிச்சயம் நடவடிக்கைகள் இடம்பெறும்.”- என்றார்.

Related Articles

Latest Articles