“அரசியல் பயணத்தை கைவிடப்போவதில்லை. அது நிச்சயம் தொடரும்.”- என்று அரச மாளிகையில் இருந்து வெளியேறுகையில் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்தார்.
கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச நேற்று வெளியேறினார்.
மொட்டு கட்சி மற்றும் எதிரணி அரசியல் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் மஹிந்தவின் வாகனத்தை சூழ்ந்து கொண்டனர்.
மஹிந்தவும், அவரது பாரியார் ஷிராந்தியும் வாகனத்துக்குள் இருந்தனர்.
மஹிந்தவுக்கு ஊடகங்கள் முன் கருத்து வெளியிட முடியாதளவுக்கு அங்கு நிலைமை காணப்பட்டது.
எனினும்,’ போகச் சொன்னார்கள் போகின்றோம். அரசியல் பயணத்தை கைவிட முடியாது. அது தொடரும்.” -என்று மஹிந்த கூறிவிட்டு சென்றார்.