அரசியல் பழிவாங்கலை கைவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்!

” எல்லா பழிகளையும் ராஜபக்சக்கள்மீது திணிக்கும் அரசியல் பழிவாங்கலை கைவிட்டு, உண்மையான குற்றவாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

எயார்பஸ் விமான ஒப்பந்த கொடுக்கல், வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த நாமல் ராஜபக்சவிடம் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதன்பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச,

‘விடுமுறை நாளில்கூட எம்மை விசாரணைக்கு அழைக்கின்றனர். நாமும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். எம்மை விசாரிப்பதற்கு காட்டும் ஆர்வத்தை மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் காண்பிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் பாதீட்டில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளையாவது நிறைவேற்றட்டும்.
நாட்டில் ஏதையாவது செய்துவிட்டு பழியை ராஜபக்சக்கள்மீது போட்டால், அந்நபர் தப்பிக்ககூடிய நிலை தற்போது காணப்படுகின்றது.

இந்நிலைமை நீடித்தால் எல்லா பழிகளையும் எம்மீது சுமத்திவிட்டு, உண்மையான குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். எனவே, அரசியல் பழிவாங்கலை ஒருபுறம் வைத்துவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles