அரசியலில் இருந்து அவ்வளவு இலகுவில் ஓய்வுபெறப்போவதில்லை. ஜனநாயக வழியில் ஆட்சியை பிடிப்பதற்குரிய சமரையும் கைவிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்கின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிர்பார்த்த பெறுபேறு கிட்டியுள்ளது.
புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி மகிழ்ச்சியளிக்கின்றது.
நாடு முன்னேறலாம், இல்லையேல் வீழ்ச்சியடையலாம். மீண்டெழுவதற்குரிய பேச்சுகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.”- எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
நாடு முன்னேறலாம், இல்லையேல் வீழ்ச்சியடையலாம். மீண்டெழுவதற்குரிய பேச்சுகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.”- எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.