அரசியிலிருந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறுமா?

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம் என்று பிரதமர் மஹிந்த ராபக்ச தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு கூட்டணி என்ற ரீதியில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே அனைத்து சவால்களையும் வெற்றிக் கொண்டு முன்னேற்றமடைய முடியும் என்றே பிரதமர் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் பங்காளி கட்சியினருக்கு கிடையாது என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணியின் ஊடாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். கடந்த காலங்களில் அரசாங்கம் எடுத்த ஒரு சில தீர்மானங்கள் தொடர்பில் பங்காளி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிலைப்பாட்டை வெளிப்படுத்தினோம்.

கெரவலப்பிடிய மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இவ்விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.” -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles