அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க உத்தரவு

அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைஇ உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு, ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை பணிக்கு அழைத்தல் மற்றும் ஏனையோரை வீடுகளிலிருந்து வேலைக்கு அமர்த்தும் வகையில் வெளியிடப்பட்ட அனைத்து சுற்று நிரூபங்களும் ரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles