அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, இது வரை காலதாமதம் செய்யப்பட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொடுப்பனவுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என்றும் திறைசேரி ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்குவதற்குத் தேவையான நிதித் தொகையை 6 மாதங்களுக்குள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வூதியம் வழங்கும் பணிக்கொடை முறையின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்து முன்மொழிவை சமர்பிப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மைக் காலமாக நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக, அரசாங்க அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணிக்கொடையை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles