அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்த தேசியக் கொள்கை!

டிஜிட்டல் அடையாள அட்டைகளை வெளியிடுதல் உள்ளிட்ட அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு அவசியமான தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்கான பணிப்புரையை தேசிய பேரவையின் ஊடாக முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தல் நடைபெற்ற உப குழுவின் முதலாவது கூட்டத்தில் அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு, ஆட்களைப் பதிவுசெய்வது தொடர்பான திணைக்களம், இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விரைவுபடுத்துவதற்கு அவசியமான தகவல்களைச் சேகரித்தல், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகவல்களைப் பாதுகாக்கும் ஏஜன்சி விரைவில் அமைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்தி நவீனமயப்படுத்துவதற்குத் தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்குவதற்கான கட்டளைச் சட்டங்களைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது. இது தொடர்பான அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னவுக்கு உபகுழு பரிந்துரைத்தது.

தேசிய சபையின் ஊடாக பாராளுமன்றத்தில் திருத்தங்களை சமர்ப்பித்ததன் பின்னர் தேசிய கொள்கையொன்றை விரைவாக தயாரிக்க முடியும் என உபகுழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கொள்கையொன்றில் இருந்து அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதை துரிதப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகளை விரைவாகவும் அதிக வினைத்திறனுடனும் வழங்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஷ மேலும் தெரிவித்தார்.

மேலும், உலகின் தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகள் மற்றும் புதுப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மிகவும் திறமையான சேவையை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் உபகுழு இங்கு வலியுறுத்தியிருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles