மலையக மக்கள் முன்னணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பியை நீக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய செயற்குழுக் கூட்டத்திலிருந்து 9 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் ஹட்டனிலுள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது கட்சி கொள்கைக்கு முரணாக 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அவரிந்தகுமார் எம்.பியை கட்சி உறுப்புரிமையில் இருந்தும், அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழுவில் மொத்தமாக 82 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். நேற்றைய கூட்டத்தில் 64 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பதுளையை பிரதிநிதித்துவம் செய்கின்ற 9 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறினர்.