” வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் தீர்மானத்துடன் நான் உடன்படவில்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிட்டேன். அதேபோல நெல்களை சந்தைக்கு வழங்குமாறு விவசாயிகளிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தேன். எனினும், விவசாயிகள் நிறுத்தனர். இதனால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
மறுபுறத்தில் அரிசி இல்லை, உணவு இல்லை என விமர்சனங்களும் எழுந்தன. எனவே, மாற்று வழி என்ன? எனவேதான் விருப்பமில்லாவிட்டாலும் இறக்குமதி செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.
அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் குறைந்த விலைக்கு அரிசியை வழங்கக்கூடியதாகவும் இருக்கும்.” -என்றார்.