அரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் காயம்!

அரிசி ஏற்றிச்சென்ற லொறியொன்று ஹப்புத்தளை வெலிமடை வீதியின் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை வெலிமடை வீதி, தங்கமலை பகுதியில் லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது நிலை கவலைக்கிடமாக இல்லை, என வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த இடத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், செங்குத்தான மற்றும் வளைவுகள் கொண்ட வீதியால் இந்த இடத்தில் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles