நுவரெலியாவிலுள்ள உலக முடிவு பகுதியிலுள்ள தேசிய பூங்கா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் பிடிக்கப்பட்ட விசேட 23 வகையான பூச்சிகள் மற்றும் 529 உயிரினங்களை நூதனமாக கொண்டு செல்ல முயன்ற ரஷ்ய நாட்டு பிரஜைகள் மூன்று பேருக்கு 86 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் தவறினால் மூன்று மாத சிறை தண்டனை விதித்து நுவரெலியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த போதே நீதவான் ஜீ. ஜீ. பீ. ஜயசிங்க சந்தேக நபர்கள் மீது 102 குற்றங்களை பதிவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
102 குற்றங்களையும் ஒப்பு கொண்டதற்கிணங்க தலா ஒருவருக்கு 28,55,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று ரஷ்ய பிரஜைகளும் ஹோட்டன் பிளேஸ் வன பூங்கா, சீகிரியா, தம்புள்ள, யால்ல, கினிகத்தேன, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்து இந்த பிராணிகளை பிடித்து மறைத்து வைத்திருந்த வேளையில் ஹோட்டன் பிளேஸ் வன பூங்கா பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்துள்ளது.










