அரை இறுதிக்குள் முன்னேறியது நியூசிலாந்து அணி

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண சர்வதேச கிரிக்கட் போட்டியில் ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ஓட்டங்களால் வீழ்த்திய நியூஸிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து ஏ குழுவிலிருந்து அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்ற அவுஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து இணைந்துக் கொண்டது. பாகிஸ்தானின் இந்த தோல்வியை அடுத்து இந்திய அணி உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

பாகிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.
ஜோர்ஜியா ப்ளிமர் 28 ஓட்டங்களையும், ப்றூக் ஹாலிடே 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 11.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து வெறும் 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவி பாத்திமா சானா 21 ஓட்டங்களை பெற்றார். நியூநிலாந்து பந்துவீச்சில் அமேலியா கேர் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஈடன் காசன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதேவேளை இன்று நடைபெறவுள்ள மற்றுமொரு தீர்க்கமான போட்டியில் இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதவுள்ளன. இன்றைய கடைசி லீக் போட்டியே பி குழுவிலிருந்து எந்த இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும் என்பதைத் தீர்மானிக்கும்.

இக் குழுவில் இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் 6 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிரண்டு இடங்களை வகிக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால், மேற்கிந்திய தீவுகளின் உலகக்கிண்ண கனவுக்கு முடிவு கட்டப்படும். மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றால் நிகர ஓட்ட வேக அடிப்படையிலேயே அரை இறுதிக்கு பி குழுவிலிருந்து இரண்டு அணிகள் தெரிவாகும்.

சுரேஷ் குமார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles