“அறகலயமூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை அழிக்க முற்பட்டனர். ஆனால் இருந்ததைவிடவும் ஆனால் பலமாக மீண்டெழுந்துள்ளோம்;. மே தினக் கூட்டத்துக்கு வந்து பார்த்தால் எம்மை அழிக்க முடியாது என்பது தெரிந்துவிடும்.”
இவ்வாறு மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை அறகலயமூலம் அழிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. எமது கட்சி ஆதரவாளர்கள் பேர வாவிக்குள் தள்ளப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.
வீடுகள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. இவ்வாறு எமது கட்சியை அழிப்பதற்கு கீழ்த்தரமான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு தீ வைத்தவர்கள் மே முதலாம் திகதி கெம்பல் மைதானத்துக்கு வந்து பார்த்தால் எமது கட்சியை அழிக்க முடிந்ததா என்பது தெரியவரும்.” – என்றார்.
