‘அவசரகால சட்டமும் நகைச்சுவையாகிவிட்டது’

“நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய அவசரகால சட்டத்தையும் இந்த அரசு நகைச்சுவையாக்கிவிட்டது. எனவே, ஒடுக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டத்தை உடன் நீக்க வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்ன இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

அரிசி மற்றும் நெல் வகைகளுக்கு விலையை நிர்ணயித்து 5 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமல்ல தரவுகளை சேகரிப்பதற்கு பிரிகேடியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். விலையை நிர்ணயிப்பதற்கு மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனாலும் உரிய தீர்வு கிட்டவில்லை. மேற்படி அதிகாரங்கள் போதாதென அவசரகால சட்டமும் கொண்டுவரப்பட்டது.

ஆனால் இன்று என்ன நடக்கின்றது? அரிசி வகைகளின் விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் நிர்ணயிக்கின்றனர். அரசு வேடிக்கை பார்க்கின்றது. அதாவது நகைச்சுவை தனமான அரசாக இது மாறியுள்ளது.

ஊரடங்கு சட்டத்தை ஏற்கனவே நகைச்சுவையாக்கிய அரசு, தற்போது அவசரகால சட்டத்தையும் நகைச்சுவையாக்கியுள்ளது. நெருக்கடியான கட்டங்களிலேயே அவசரகால சட்டம் பயன்படுத்தப்படும். ஆனால் ஒடுக்குமுறைக்காகவே இந்த சட்டத்தை தற்போதைய அரசு கொண்டுவந்தது. அது உடன் நீக்கப்பட வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles