அவுஸ்ரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்

அவுஸ்ரேலியாவில் கரை ஒதுங்கிய 230 பைலட் திமிங்கிலங்களில் பாதி திமிங்கிலங்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்திற்கு அருகே 230 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் களத்தில் இறங்கினர். கரை ஒதுங்கிய திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சிக்கப்பட்டது. எனினும் 230 பைலட் திமிங்கிலங்களில் பாதியளவு இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்ரேலியாவில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது அரிதான விஷயமல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே டாஸ்மேனியா தீவு கடற்கரையில் சுமார் 500 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. அவைகளில் சுமார் 100 திமிங்கிலங்கள் மட்டுமே பிழைத்தன.

Related Articles

Latest Articles