அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

கொழும்பு காலி பிரதான வீதியின் அஹுங்கல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகிழூர்தியில் வருகை தந்த இருவர் வீதியோரத்தில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்றுள்ள நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles