‘ஆசியாவின் ராணி’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள உலகிலேயே மிகப் பெரிய நீல நிற இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த மாணிக்கக்கல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இன்றுதான் அது தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிடப்பட்டன. சுமார் 310 கிலோ எடையுடைய இரத்தினக்கல்லும் காட்சிப்படுத்தப்பட்டது.
இரத்தினபுரியிலேயே ‘ஆசியாவின் ராணி’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அந்த மாணிக்கக்கல் தற்போது ஹொரணை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.