ஆடையின்றி ஆஸ்கர் மேடைக்கு வந்த ஜான்சீனாவால் பரபரப்பு!

ஆஸ்கர் விருது விழாவில் பிரபல WWE சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா விருது ஒன்றை அறிவிக்க முழுவதும் நிர்வாணமாக மேடைக்கு வந்தார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

நடிகைகளை இப்படி நிர்வாணமாக அனுப்பி இருந்தால், இரண்டு இடங்களையும் எதை வைத்து மறைத்துக் கொண்டு வருவார்கள் என்றும் ஆண்களின் நிர்வாணம் ஒன்றும் விருது விழாவுக்கான கேளிக்கை பொருள் அல்ல எனவும் ஏகப்பட்ட பிரபலங்களே ஆஸ்கர் விருது விழா குழுவுக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஜான் சீனா ஆடை அணியாமல் வரவில்லை என்றும் நேக்கட் கலர் உள்ளாடை அணிந்தே வந்திருக்கிறார் என்கிற ரகசியம் புகைப்படமாகவே கசிந்து ரசிகர்களை மேலும், அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

யர்கோஸ் லந்திமோஸ் இயக்கத்தில் எம்மா ஸ்டோன் நடித்து வெளியான ‘புவர் திங்ஸ்” திரைப்படம் ஓபன்ஹெய்மர் படத்தை தொடர்ந்து அதிக ஆஸ்கர் விருதுகளை வென்றது.

சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்கப், சிறந்த தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஆஸ்கர் விருதுகளை அந்த படம் வென்றது. Poor Things படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க வித்தியாசமா பண்றேன் என்கிற பெயரில் ஜான் சீனா ஆடை அணியாமல் வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Related Articles

Latest Articles