” ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலே தற்போது அவசியம். மாறாக உள்ளாட்சிசபைத் தேர்தல் அவசியம் இல்லை.” – என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.
மேற்படி இரு தேர்தல்கள்மூலமே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்தகையதொரு தேர்தலையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால்கூட அதனை எதிர்கொள்வதற்கு தமது கட்சி தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.










