கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களுக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபருடன் இருந்த கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
25, 35 வயதுகளுடைய குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
