ஆட்டோ சாரதியின் நேர்மை – ஜேர்மன் உல்லாச பயணியின் பணப்பையை மீள ஒப்படைப்பு

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற ஜேர்மன் நாட்டு தம்பதியினரின் காணாமல் போன பணப்பை மற்றும் முக்கியமான ஆவணங்களை முச்சக்கரவண்டி சாரதியொருவர் மீட்டெடுத்து ஒப்படைத்துள்ளார். ஹற்றன் நகரில் முச்சக்கரவண்டி சாரதியாக தொழில்புரியும் எல்.எச் சுமித் என்பவரே இவ்வாறு ஒப்படைத்துள்ளார்.

பலாங்கொட சிவனொளிபாதமலை வீதியூடாக ஹற்றன் நகருக்கு சென்ற தம்பதியினரை முச்சக்கர வண்டி சாரதியான இவர் நல்லதண்ணி உல்லாச விடுதி வரை விட்டு மீண்டும் அடுத்த தினம் இவர்களை மீண்டும் ஹற்றன் நகருக்கு அழைத்து வரும் இணக்கப்பாட்டுடன் திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்குத் திரும்பி வந்து முச்சக்கர வண்டியைத் துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது இவர்களின் பணப்பை இவருக்கு கிடைத்துள்ளது

இதனையடுத்து அவர் உடனடியாக நல்லதண்ணியில் அவர்களை விட்டு வந்த விடுதி முகாமையாளருடன் தொடர்புகொண்டு விடயத்தை கூறி மறுநாள் பணப்பையை ஒப்படைத்துள்ளார்.

Related Articles

Latest Articles