ஆட்டோவொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பிறந்து 30 நாட்களேயான பச்சிளம் குழந்தையொன்று பலியாகியுள்ளது. அத்துடன் தாய் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் மெடிதலே பகுதியில் வைத்தே நேற்று (09.11.2020) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குழந்தைக்கு மருந்து எடுப்பதற்காக பதுளை வைத்தியசாலைக்குவந்துவிட்டு மீண்டும்பிபிலை நோக்கி பயணிக்கையில், ஆட்டோவின் முன்பகுதி சக்கரம் கழன்றதாலேயே பள்ளத்தில் பிரண்டு ஆட்டோ இவ்வாறு விபத்துக்குள்ளானது.
ஆட்டோ சாரதி காயம் எதுவும் ஏற்படாமல் தப்பியுள்ளார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தாய், 6 வயதுடைய சகோதரர் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
க.கிசாந்தன், எம். செல்வராஜா,