ஆறா வலி தந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றோடு ஐந்தாண்டுகள்…!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (2019) இடம்பெற்று இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகியவை தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இலக்குகளில் உள்ளடங்குகின்றன.

தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 272 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானார்கள
குண்டுத் தாக்குல் சம்பவத்தில் பலியானவர்களின் ஆத்ம சாந்திக்கான விசேட ஆராதனைகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெறவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்றைய தினம் (21) நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன. இந்த அஞ்சலி நிகழ்வையொட்டி நேற்றுப் பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய அஞ்சலி ஊர்வலம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்து இரவு முழுவதும் செப வழிபாடுகள் இடம்பெற்றதுடன் இன்று காலை 8.30 மணியளவில் அங்கு விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்களை நினைவேந்தும் வகையில் காலை 8.30 மணி முதல் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles